/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கப்பூரில் இரு நாள் 'வைகுண்ட ஏகாதசி' நேரலையில் காணலாம்
/
சிங்கப்பூரில் இரு நாள் 'வைகுண்ட ஏகாதசி' நேரலையில் காணலாம்
சிங்கப்பூரில் இரு நாள் 'வைகுண்ட ஏகாதசி' நேரலையில் காணலாம்
சிங்கப்பூரில் இரு நாள் 'வைகுண்ட ஏகாதசி' நேரலையில் காணலாம்
ADDED : டிச 29, 2025 07:35 AM

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், 'இந்து அறக்கட்டளை வாரியம்' சார்பில், ஸ்ரீ கிருஷ்ண விஜயம் தமிழ் சொற்பொழிவு, நாளை மற்றும் 31ல் நடக்கிறது. இதில், ஸ்ரீ நாகை முகுந்தன் சொற்பொழிவு ஆற்றுகிறார்.
வைகுண்ட ஏகாதசி கலாசார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த சொற்பொழிவானது, இரு நாட்களிலும் இரவு 11:10 முதல் 12:40 வரை, சிங்கப்பூரில் உள்ள பி.ஜி.பி., 'லெவல் - 1' என்ற இடத்தில் நடக்கிறது.
இந்த சொற்பொழிவை, https://www.youtube.com/@HinduEndowmentsBoard என்ற 'யு - டியூப்' பக்கத்தில், நம் நாட்டு நேரப்படி இரவு 9:30 மணி முதல் காணலாம்.