/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளியுறவு துறை செயலர் பொறுப்பேற்பு
/
வெளியுறவு துறை செயலர் பொறுப்பேற்பு
ADDED : அக் 19, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக உள்ள விஜயகுமாருக்கு, இந்திய வெளியுறவு துறையின், சென்னை தலைமையகத்தின் செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை கிண்டி பொறியியல் கல்லுாரியில் படித்த இவர், 2016ல், ஐ.எப்.எஸ்., தேர்ச்சி பெற்றார். செப்., 2 முதல், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர், ரோம், காபூல் மற்றும் தோஹாவில் உள்ள இந்திய துாதரகங்களில் பணியாற்றியுள்ளார். இந்திய வெளியுறவு துறையின் சென்னை தலைமையகத்தின் செயலராக, கூடுதல் பொறுப்பேற்றார்.

