/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் மீது லாரி மோதல் வனத்துறை அலுவலர் பலி
/
பைக் மீது லாரி மோதல் வனத்துறை அலுவலர் பலி
ADDED : மார் 15, 2026 05:30 AM

படப்பை: பைக் மீது லாரி மோதிய விபத்தில், வனத்துறை அலுவலர் நேற்று பலியானார்.
தாம்பரம் அருகே, பழைய பெருங்களத்துார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் சகாயராஜ், 45. குன்றத்துார் வனச்சரகத்தில் வன அலுவலராக பணியாற்றி வந்தார்.
இவர், பணி காரணமாக, நேற்று 'ஹோண்டா யுனிகான்' பைக்கில், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம் நோக்கி சென்றார்.
படப்பை பகுதியை கடந்த போது, பின்னால் கான்கிரீட் பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக சென்ற ஈச்சர் லாரி மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கிய சுரேஷ் சகாயராஜ், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சுரேஷ் சகாயராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

