ADDED : செப் 30, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்;வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு, அக்., 5ம் தேதி நடத்தவிருந்த வன உயிரின தட ஓட்டம் ரத்து செய்யப்படுவதாக, வண்டலுார் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
வண்டலுார் உயிரியல் பூங்காவில், வனவிலங்கு வார விழாவின் ஒரு பகுதியாக, அக்., 5ம் தேதி வன உயிரின மாரத்தான் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால், மாரத்தான் ரத்து செய்யப்படுகிறது.
ஏற்கனவே பதிவு செய்துள்ள அனைவருக்கும், நுழைவு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும். இந்த மாற்றம் காரணமாக, உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.
உங்கள் பொறுமைக்கும், புரிதலுக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றி.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.