/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமணி ஏட்டுவை தாக்கிய 'மாஜி' உதவியாளர் கைது
/
தரமணி ஏட்டுவை தாக்கிய 'மாஜி' உதவியாளர் கைது
ADDED : டிச 13, 2024 12:25 AM
தரமணி, தரமணி காவல் நிலைய முதுநிலை காவலர் கண்ணன், 38. கடந்த 8ம் தேதி இரவு, தரமணியில் ரோந்து பணியில் இருந்தார். தரமணி ரயில் நிலையம் அருகே, 'டாஸ்மாக்' வாசலில் போதையில் இருந்தவர் மற்றொரு நபரிடம் தகராறு செய்தார். அந்த போதை ஆசாமியை, அங்கிருந்து செல்லும்படி ஏட்டு கண்ணன் வலியுறுத்தினார்.
ஆத்திரமடைந்த போதை ஆசாமி, கல்லால் ஏட்டு கண்ணன் கழுத்தில் தாக்கி தப்பிச் சென்றார். இதில் ஏட்டு பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றார்.
தரமணி போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தபோது, தாக்குதலில் ஈடுபட்டவர் கே.பி.கே.நகரைச் சேர்ந்த சங்கர், 29, என தெரிந்தது. இவர், சோழிங்கநல்லுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மாவட்ட செயலர் கந்தனின் உதவியாளர் என்பது தெரிந்தது. போலீசார் நேற்று, சங்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.