/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அயனாவரம் அரிசி கடைக்காரரின் வாகனத்தை கடத்திய 'மாஜி' ஓட்டுனர்
/
அயனாவரம் அரிசி கடைக்காரரின் வாகனத்தை கடத்திய 'மாஜி' ஓட்டுனர்
அயனாவரம் அரிசி கடைக்காரரின் வாகனத்தை கடத்திய 'மாஜி' ஓட்டுனர்
அயனாவரம் அரிசி கடைக்காரரின் வாகனத்தை கடத்திய 'மாஜி' ஓட்டுனர்
ADDED : மே 01, 2025 12:20 AM
அயனாவரம், :அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலையில், முத்துகிருஷ்ணன் என்பவர் 'முத்துகிருஷ்ணா அண்ட் கோ' என்ற பெயரில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில், துாத்துக்குடியைச் சேர்ந்த பிரசாந்த், 35, என்பவர், லோடு வாகன ஓட்டுனராக பணிபுரிந்தார். மது போதைக்கு அடிமையான பிரசாந்தின் நடவடிக்கை சரியில்லாததால், முத்துகிருஷ்ணன் அறிவுறுத்தல்படி, கடையின் பொறுப்பாளர் குமார், 49, என்பவர், பிரசாந்தை நேற்று முன்தினம் வேலையில் இருந்து நிறுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், தான் ஓட்டி வந்த 'பொலேரோ' லோடு வாகனத்தை, அன்றைய தினம் நள்ளிரவு கடத்திச் சென்றுள்ளார்.
அயனாவரம் போலீசார் விசாரித்து, புழல் காவாங்கரையில் நின்றிருந்த பிரசாந்தை மடக்கி பிடித்தனர். விசாரணையில், மது போதையில் வாகனத்தை எடுத்து சென்றதாக ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.