/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் கடையில் கொள்ளையடித்த 'மாஜி' ஊழியர் ஆந்திராவில் சிக்கினார்
/
மொபைல் கடையில் கொள்ளையடித்த 'மாஜி' ஊழியர் ஆந்திராவில் சிக்கினார்
மொபைல் கடையில் கொள்ளையடித்த 'மாஜி' ஊழியர் ஆந்திராவில் சிக்கினார்
மொபைல் கடையில் கொள்ளையடித்த 'மாஜி' ஊழியர் ஆந்திராவில் சிக்கினார்
ADDED : ஜூலை 20, 2025 01:21 AM

யானைகவுனி:மொபைல் போன் கடையில் கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சவுகார்பேட்டை, இருளப்பன் தெருவில் உள்ள வணிக வளாகத்தில், மொபைல் போன் கடை நடத்தி வருபவர் அங்கேத் குமார்.
கடந்த 14ம் தேதி இரவு கடையின் ஷட்டரை உடைத்து, 29.50 லட்சம் ரூபாய் மற்றும் 17 'ஐபோன்கள்' உட்பட 25 மொபைல் போன்கள் திருடு போயிருந்தன.
இது குறித்து யானைகவுனி போலீசார் விசாரித்தனர்.
இதில், கடையின் முன்னாள் ஊழியரான ராஜஸ்தான் மாநிலம் நாகூரைச் சேர்ந்த முகேஷ், 28, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கடந்த வாரம் முகேஷ், 'சொந்த ஊருக்கு செல்கிறேன்; இனி வேலைக்கு வரமாட்டேன்' எனக்கூறி சென்றார். ஏற்கனவே, கடையை நோட்டமிட்டிருந்த முகேஷ், கடையின் ஷட்டர் பூட்டின் சாவியை கொண்டு, போலி சாவி தயாரித்துள்ளார். அதை வைத்து கடையின் ஷட்டரை திறந்து, பணம் மற்றும் மொபைல்போன்களை திருடி கொண்டு, ஆந்திராவில் பதுங்கியது தெரியவந்தது.
யானைகவுனி போலீசார் சைபர்கிரைம் உதவியுடன் முகேஷ் இருக்கும் இடத்தை கண்டறிந்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 25.15 லட்சம் ரூபாய் மற்றும் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 17 ஐபோன்கள் உட்பட 25 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.