/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.9.10 கோடியில் திருநின்றவூர் ஏரி சீரமைக்க அடிக்கல்
/
ரூ.9.10 கோடியில் திருநின்றவூர் ஏரி சீரமைக்க அடிக்கல்
ரூ.9.10 கோடியில் திருநின்றவூர் ஏரி சீரமைக்க அடிக்கல்
ரூ.9.10 கோடியில் திருநின்றவூர் ஏரி சீரமைக்க அடிக்கல்
ADDED : ஜூலை 17, 2025 12:15 AM
திருநின்றவூர், திருநின்றவூர் ஏரி 9.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது.
திருநின்றவூரில் 864 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி உள்ளது. பருவமழையின்போது திருநின்றவூர் ஏரி நிரம்பி, அதை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளான பெரியார் நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம் மற்றும் சுதேசி நகரின் 2,510 குடியிருப்புகளில், வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் வீடுகளில் வெளியில் வந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர்.
வெள்ள பாதிப்பை தடுக்க, ஏரிக்கரையை பலப்படுத்தி 650 மீட்டர் நீளத்திற்கு மூடு கால்வாய் மற்றும் இரண்டு நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படும் என, சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருநின்றவூர் ஏரியில் அதற்கான பணியை அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் ஆகியோர், அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தனர். 9.10 கோடி ரூபாய் நிதியில், ஏரி சீரமைப்பு பணி துவங்கியுள்ளது.