/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமறைவு குற்றவாளிகள் நால்வர் கைது
/
தலைமறைவு குற்றவாளிகள் நால்வர் கைது
ADDED : பிப் 03, 2025 02:07 AM
ஓட்டேரி:ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கோகுல், 28. இவர், ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்பாபு, 22, சத்தியப்பன் மூன்றாவது தெருவைச் சேர்ந்த வசந்த், 24, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 21, ஆகிய நால்வரும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.
ஓட்டேரி காவல் நிலையத்தில், நால்வர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நால்வருக்கும் பிடியாணை பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில், வெவ்வேறு பகுதிகளில் வைத்து நால்வரையும் கைது செய்த தனிப்படை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.