/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமூக வலைதளத்தில் பழகி பணம் பறித்த நால்வர் கைது
/
சமூக வலைதளத்தில் பழகி பணம் பறித்த நால்வர் கைது
ADDED : ஜூலை 09, 2025 12:20 AM
செம்மஞ்சேரி, சமூக வலைதளத்தில் நட்பாக பழகி, வாலிபரிடம் பணம் பறித்த, சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
பனையூரை சேர்ந்தவர் அப்துல் சலீம், 30. இவருக்கு, 'கிரிண்டர்' எனும் சமூக வலைதளம் வாயிலாக, பெரும்பாக்கத்தை சேர்ந்த, 17 வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது.
இரு தினங்களுக்கு முன், சோழிங்கநல்லுார், பாண்டிச்சேரி பாட்டை சாலையில், சிறுவனும், அப்துல் சலீமும் சந்தித்துள்ளனர். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுவனுடன் வந்து மறைந்திருந்த மூன்று பேர், அப்துல் சலீமை சூழ்ந்து கொண்டனர்.
அப்போது, அப்துல் சலீமை தாக்கி, அவரிடம் இருந்த, 3,000 ரூபாயை பறித்து தப்பினர். செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த மதன்குமார், 19, கண்ணன், 17, கவுதம், 22, என தெரிந்தது.
நேற்று, சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.