/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாங்காடில் ஆக்கிரமிப்பு 4 வீடுகள் அகற்றம்
/
மாங்காடில் ஆக்கிரமிப்பு 4 வீடுகள் அகற்றம்
ADDED : ஜன 28, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் அருகே மாங்காடு நகராட்சி, லட்சுமிபுரம் சாலையோரம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, நான்கு வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இவர்களுக்கு, வருவாய் துறை மற்றும் மாங்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக, ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாங்காடு போலீசார் பாதுகாப்புடன் சென்ற வருவாய் துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரம் வாயிலாக நான்கு வீடுகளையும் இடித்து அகற்றினர்.
வீடுகளை இடிக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

