/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பர்கர் கடையில் ரூ.22 லட்சம் 'ஆட்டை' மேலாளர் உட்பட நான்கு பேர் கைது
/
பர்கர் கடையில் ரூ.22 லட்சம் 'ஆட்டை' மேலாளர் உட்பட நான்கு பேர் கைது
பர்கர் கடையில் ரூ.22 லட்சம் 'ஆட்டை' மேலாளர் உட்பட நான்கு பேர் கைது
பர்கர் கடையில் ரூ.22 லட்சம் 'ஆட்டை' மேலாளர் உட்பட நான்கு பேர் கைது
ADDED : நவ 24, 2025 02:02 AM
சென்னை: புரசைவாக்கம், கந்தப்பா தெருவைச் சேர்ந்தவர் சையது தானீஷ், 27. இவர் நடத்தி வரும் பர்கர் கடையில், கேரளாவைச் சேர்ந்த முகமத் பா ரி, 26, என்பவர் மேலாளராகவும், முகமது ஹனீப், 23, பூபாலன், 23, ராயன், 21, ஆகிய மூவரும், 'பில்' போடும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடையின் வரவு - செலவு கணக்கை, சையது தானீஷ் ஆய்வு செய்ததில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு விலை கொண்ட ரசீது கொடுத்து, அலுவலக ரசீதில் விலையை குறைத்து காட்டி ஊழியர்கள் மோசடி செய்தது தெரிந்தது.
இதன் மூலம், 35 லட்சம் ரூபாய்க்கு மேல் கையாடல் செய்ததும் தெரியவந்தது. இது குறித்து, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சையது தானீஷ் புகார் அளித்தார். புகாருடன், 21.68 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார். அதன்படி, நேற்று கடை மேலாளர் உட்பட நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.