/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துாரில் கோவில் நிலம் அபகரிப்பு நான்கு பேருக்கு மூன்றாண்டு சிறை
/
ஆலந்துாரில் கோவில் நிலம் அபகரிப்பு நான்கு பேருக்கு மூன்றாண்டு சிறை
ஆலந்துாரில் கோவில் நிலம் அபகரிப்பு நான்கு பேருக்கு மூன்றாண்டு சிறை
ஆலந்துாரில் கோவில் நிலம் அபகரிப்பு நான்கு பேருக்கு மூன்றாண்டு சிறை
ADDED : ஏப் 25, 2025 12:15 AM
சென்னை, மாதவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் வாயிலாக அபகரித்து வேறு நபருக்கு விற்ற தாய், மகன், மருமகள் உட்பட நான்கு பேருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஆலந்துார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலந்துாரில், மயிலை மாதவபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, அதே பகுதியில் உள்ள வேம்புலி சுபேதார் தெருவில், 6,248 சதுர அடி நிலம் உள்ளது.
இந்த நிலத்தை, ஆலந்துாரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ,60, அவரது மகன் நந்தகி ேஷார்,42, மருமகள் கீதா,39 மற்றும் இவரது உறவினர்கள் அபி ேஷக் கிருஷ்ணா,43, ஆகியோர், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்துள்ளனர்.
இந்த நிலைத்தை பழவந்தாங்கலைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரசாந்த் என்பவருக்கு, 2.75 கோடி ரூபாய்க்கு விலை பேசி பேசி உள்ளனர்.
அதன்படி, 1.75 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 1 கோடி ரூபாய்க்கு வீட்டு மனை ஒன்றை வாங்கியும் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பிரசாந்த் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு, ஆவணங்கள் மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, ஜெயஸ்ரீ உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு, சென்னை ஆலந்துார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஜெயஸ்ரீ உள்ளிட்ட நான்கு பேருக்கும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா, 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
***

