/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியுடன் சுற்றிதிரிந்த நான்கு வாலிபர்கள் கைது
/
கத்தியுடன் சுற்றிதிரிந்த நான்கு வாலிபர்கள் கைது
ADDED : ஆக 06, 2025 12:16 AM
அம்பத்தூர் :அம்பத்தூர், ஒரகடம், புழல் ஏரிக்கரை அருகே, வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றிதிரிவதாக அம்பத்தூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார், அங்கு கத்தியுடன் சுற்றிதிரிந்த நான்கு வாலிபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின், விசாரணையில் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் குமார், 18 ; ஹரிஷ், 22, கார்த்திக், 22 மற்றும் ஜான், 18, என தெரிந்தது. இதில், மோனிஷ் குமார் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
இதனால், தங்களது பாதுகாப்புக்காக கத்தியை வைத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். நான்கு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.