/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' குரூப் - 2 ' தேர்வுக்கு இலவச வகுப்பு
/
' குரூப் - 2 ' தேர்வுக்கு இலவச வகுப்பு
ADDED : ஜன 13, 2025 02:18 AM
சென்னை:குரூப் - 2, 2ஏ'வில், மொத்தம் 2,327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை, கடந்த ஜூன் மாதம் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதற்கான முதல்நிலை தேர்வு, செப்., 14ம் தேதி நடந்தது.
இத்தேர்வில், கிண்டியில் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் பயிற்சி பெற்ற, 15 பேர் தேர்ச்சி பெற்றனர். தற்போது, முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கடந்த அக்., மாதம் முதல் நடந்து வருகின்றன.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்த படிவத்துடன், கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.