/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குரூப் - 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
/
குரூப் - 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : ஜன 08, 2025 08:22 PM
சென்னை:டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 4 தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் கிண்டியில் துவங்க உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை துவங்க உள்ளது. பயிற்சி வகுப்பு, வார நாட்களாக மட்டுமே நடக்கும்.
பயிற்சியில் சேர விரும்புவோர், ஆவணங்களுடன் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அணுகலாம். விபரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.