/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வையற்ற பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
/
பார்வையற்ற பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
ADDED : செப் 16, 2025 01:12 AM
தண்டையார்பேட்டை;பார்வையற்ற பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில், இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் நிதி உதவியுடன், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், தண்டையார்பேட்டையில் பார்வையற்ற பெண்களுக்கு ஆறு மாத கால இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது.
வரும் 1ம் தேதி துவங்க உள்ள இப்பயிற்சியில், ஆடைகள், தலையணை உறைகள், பைகள் தைக்கும் பயிற்சியும், எம்ராய்டரி மற்றும் கூடை முடைதல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
பயிற்சியில் பங்கு பெற விரும்பும் பார்வையற்ற பெண்களுக்கு, இலவச தங்கும் வசதி, உணவு வசதி செய்து தரப்படுகிறது.
இப்பயிற்சியில் பங்கு பெற விரும்புவோர், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம், இரட்டை குழி தெரு, தண்டையார்பேட்டை என்ற முகவரியிலும்; tabchennaitn@gmail.com என்ற இ - மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 90423 45660, 93445 48654 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.