/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வீல் சேர்' டென்னிசில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு இலவச பயிற்சி
/
'வீல் சேர்' டென்னிசில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு இலவச பயிற்சி
'வீல் சேர்' டென்னிசில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு இலவச பயிற்சி
'வீல் சேர்' டென்னிசில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு இலவச பயிற்சி
ADDED : ஆக 03, 2025 12:15 AM
சென்னை “சர்வதேச அளவில், 'வீல் சேர்' டென்னிசில் பங்கேற்க விரும்பும் இளம் வீரர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்க தயாராக உள்ளோம்,” என, தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைமை நிர்வாக அதிகாரி ஹிதன் ஜோஷி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் எனும் டி.என்,டி.ஏ., சார்பில், சென்னையில் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. கடைசியாக நடந்த சீனியர் டென்னிஸ் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த ரித்தின் பிரணவ், சாம்பியன் பட்டம் வென்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள், டென்னிஸ் போட்டிகளில் சாதித்து வரும் நிலையில், 'வீல் சேர்' டென்னிஸ் தொடரில் சாதிக்க, தமிழகத்தில் உள்ள வீரர்களுக்கு போதிய ஊக்கம் தரப்படவில்லை.
டென்னிஸ் போட்டிகளை நடத்தி வரும் அகில இந்திய டென்னிஸ் சங்கம், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று போட்டிகளை மட்டுமே நடத்துகிறது.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீல் சேர் போட்டிகளை, தமிழகத்தில் தொடர்ந்து நடத்தினால் மட்டுமே, தமிழகத்தில் புதிய இளம் வீரர்கள் உருவாவர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைமை நிர்வாக அதிகாரி ஹிதன் ஜோஷி கூறியதாவது:
தமிழகத்தில் மட்டும் அல்ல; இந்திய அளவிலும், சர்வதேச போட்டிகளில் 'வீல் சேர்' டென்னிசில் சாதித்த வீரர்கள் இல்லை. இந்த சூழ்நிலை மாற, புதிய இளம் வீரர் களை உருவாக்க வேண்டும்.
அதனால், இலவச பயிற்சி, வீல் சேர், விளையாட்டு மைதானம் என, அனைத்தும் வழங்க தயாராக இருக்கிறோம். வீரர்கள் ஆர்வமுடன் வந்தால், அனைத்தும் சாத்தியமாகும். 10 ஆண்டுகளாக இலவச பயிற்சி அளித்து வருகிறோம். இந்தாண்டுக்கும் இலவச பயிற்சி முகாம் நடத்த தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு வேண்டும் 'வீல் சேர்' டென்னிஸ் போட்டிக்கு, தமிழகத்தில் பெரிய வரவேற்பில்லை. சாதாரண டென்னிஸ் போட்டிகளைவிட, குறைந்த அளவில் தான் வீல் சேர் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பரிசுத் தொகையும் மிகக் குறைவே. ஒவ்வொரு போட்டி முடிவிலும், வீல் சேரின் சக்கரத்தை பழுது பார்க்கவே, அந்த பரிசுத் தொகை முழுதும் செலவாகிறது. அதனால், இதில் ஆர்வம் செலுத்தி விளையாட முடியவில்லை. தமிழக அரசு, இதற்கு சரியான தீர்வு காண வேண்டும். - 'வீல் சேர்' டென்னிஸ் வீரர்கள்

