/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' ரேலா ' வில் ' வெரிகோஸ் வெயின் ' இலவச முகாம்
/
' ரேலா ' வில் ' வெரிகோஸ் வெயின் ' இலவச முகாம்
ADDED : ஆக 02, 2025 12:20 AM
குரோம்பேட்டைகுரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில், 'வெரிகோஸ் வெயின்' இலவச சிகிச்சை முகாம், நாளை நடக்கிறது.
நாட்டில் 25 சதவீதம் பேர், வீக்கமடைந்த சுருள் சிரை எனும் 'வெரிகோஸ் வெயின்' நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
போலீசாரிடையே 2021ல் நடத்தப்பட்ட ஆய்வில், 14.7 சதவீதம் பேருக்கு சுருள் சிரை பாதிப்பும், 20 சதவீதம் பேருக்கு அதில் புண்கள் உருவாகும் அபாயமும் இருப்பது கண்டறியப்பட்டது.
வெரிகோஸ் வெயின் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, குரோம் பேட்டை 'ரேலா' மருத்துவ மனையில், நாளை இலவச சிகிச்சை முகாம், 'வீனஸ் டாப்ளர்' பரிசோதனை நடத்தப்படுகிறது.
கூடுதல் பரிசோதனைகளுக்கு, கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியும் உண்டு. முகாமில் பங்கேற்க, 72000 95658 என்ற எண் ணில் தொடர்பு கொள்ளலாம் என, ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.