/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடல் தண்டையார்பேட்டையில் நெரிசல்
/
ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடல் தண்டையார்பேட்டையில் நெரிசல்
ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடல் தண்டையார்பேட்டையில் நெரிசல்
ரயில்வே 'கேட்' அடிக்கடி மூடல் தண்டையார்பேட்டையில் நெரிசல்
ADDED : மார் 01, 2024 12:24 AM

தண்டையார்பேட்டை, மணலியில் உள்ள சி.பி.சி.எல்., ஆலை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபடுகிறது.
இங்கிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக தண்டையார்பேட்டை, எண்ணுார் நெடுஞ்சாலையில், ஐ.ஓ.சி., நிறுவனத்தின் உள்ளே ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இதற்காக, தினமும் 20 முறைக்கு மேல், ரயில்வே கேட் மூடப்படுகிறது.
இதனால், இப்பகுதியை சுற்றியுள்ளவர்கள் அவதியடைகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், 40 ஆண்டுகளாக இப்பகுதியினர் அவதியடைந்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களும், நெரிசலில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது.
போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இது ரயில்வே இடம் என்பதால், ஐ.ஓ.சி., நிறுவனம் ரயில்வேக்கு வாடகை செலுத்தி வருகிறது. ரயில்வே இடத்தில் மாநில அரசால் மேம்பால பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

