/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் வழிப்பறி திருடர்கள் அராஜகம் அடிக்கடி அரங்கேறும் சம்பவங்களால் பீதி
/
ஓ.எம்.ஆரில் வழிப்பறி திருடர்கள் அராஜகம் அடிக்கடி அரங்கேறும் சம்பவங்களால் பீதி
ஓ.எம்.ஆரில் வழிப்பறி திருடர்கள் அராஜகம் அடிக்கடி அரங்கேறும் சம்பவங்களால் பீதி
ஓ.எம்.ஆரில் வழிப்பறி திருடர்கள் அராஜகம் அடிக்கடி அரங்கேறும் சம்பவங்களால் பீதி
ADDED : ஜன 13, 2025 02:03 AM
சென்னை:பழைய மாமல்லபுரம் சாலையான ஓ.எம்.ஆரில், தரமணி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, நாவலுார் பகுதிகளில், ஒரு மாதத்தில் 20க்கும் மேற்பட்ட நபர்களை தாக்கி, மொபைல் போன்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
செம்மஞ்சேரியில் காது, தோள்பட்டையை வெட்டி மொபைல் போன் பறித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, ஆட்டோ, பைக், இரும்பு பொருட்கள் திருடுவது அதிகரித்து வருகிறது.
மெட்ரோ ரயில் பணித்தளங்களில், வாரத்திற்கு நான்கு, ஐந்து திருட்டு சம்பவங்கள் நடப்பதால், அந்நிறுவன அதிகாரிகள் திணறுகின்றனர்.
போலீஸ் பற்றாக்குறை
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
வழிப்பறியை விட, தாக்குதல் நடத்தி உயிருக்கு சேதம் ஏற்படுத்துவதால் அச்சமடைகிறோம். 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான மதிப்புள்ள பொருட்களாக இருந்தால், போலீசார் புகார் வாங்குவதில்லை.
அதையும் மீறி கொடுத்தால், அலைக்கழித்தே காவல் நிலையம் பக்கம்திரும்பாத வகையில் செய்து விடுகின்றனர்.
எனவே, காவல் உயர் அதிகாரிகள் தலையிட்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். காவல் நிலையங்களுக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காவல் உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஒவ்வொரு காவல் நிலையத்திலும், போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனால், ரோந்து பணியை தீவிரப்படுத்த முடியவில்லை. புகார் மனு வாங்க மறுக்கும் போலீசார் மீது, கமிஷனரிடம் புகார் அளிக்கலாம்,” என்றனர்.