/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது வாங்கி தராததால் தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற நண்பர் கைது
/
மது வாங்கி தராததால் தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற நண்பர் கைது
மது வாங்கி தராததால் தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற நண்பர் கைது
மது வாங்கி தராததால் தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற நண்பர் கைது
ADDED : ஜூலை 15, 2025 12:41 AM

கொடுங்கையூர், மது வாங்கி தராத ஆத்திரத்தில், தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 30. இவர், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் அதிகாலை, கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர், 'டாஸ்மாக்' கடை முன் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், மார்பு எலும்பு உடைந்திருப்பது தெரிய வந்தது. மேலும், தலையின் பின் பகுதியில் தாக்கி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
போலீசாரின் விசாரணையில், அவரது நண்பரான கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த பிரேம்குமார், 25, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று விசாரித்தனர்.
விசாரணையின்போது பிரேம்குமார் அளித்த வாக்குமூலம்:
சில தினங்களுக்கு முன், ஹரிகிருஷ்ணன் என் மொபைல் போன், ஆதார் கார்டு ஆகியவற்றை மதுபோதையில் எடுத்து சென்றார். கடந்த 12ம் தேதி இரவு, நான் ஹரிகிருஷ்ணனிடம் ஆதார்கார்டு, மொபைல்போன் கேட்டதோடு, மதுபானம் வாங்கி தரும்படி கேட்டேன். மது வாங்கி தர மறுப்பு தெரிவித்ததோடு, என்னை பற்றி அவதுாறாக பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான், ஹரிகிருஷ்ணனை, கட்டையால் தலையில் அடித்ததோடு, மார்பில் கல்லை போட்டு கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.