/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேர்ந்த வாழ்ந்த பெண்ணை அபகரித்த நண்பர் கொலை
/
சேர்ந்த வாழ்ந்த பெண்ணை அபகரித்த நண்பர் கொலை
ADDED : டிச 27, 2024 08:48 PM
அமைந்தகரை:வீட்டில் படுகை அறையில், கள்ளக்காதலியுடன் தகாத உறவில் இருந்த, தனது நண்பரை அடித்து கொன்ற வழக்கில், கணவன் - மனைவியாக நாடகமாடிய இருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அமைந்தகரை, எம்.எம்., காலனி, 'ஏ' பிளாக் பகுதியில் வசிப்பவர் மோகன் ராம், 30. இவரது மனைவி மீனாட்சி, 30.
தம்பதியின் வீட்டிற்கு, மோகன் ராமின் நண்பரான, செனாய் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன், 40 என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
கடந்த 25ம் தேதி இரவு, மோகன்ராம் மது அருந்திவிட்டு வீட்டில் துாங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்த போது, படுக்கை அறையில், நண்பர் ராமச்சந்திரனும், மீனாட்சியும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன் ராம், இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். அதில், ராமச்சந்தரன் மயங்கி விழுந்தார். மதியம் 12:00 மணி வரையும் ராமச்சந்திரன் கண்விழிக்காமல் இருந்ததால், அவரை ஆம்புலன்ஸ் வாயிலாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவரிடம், ராமச்சந்திரன் சக்கரை நோயால் மயங்கியதாக தெரிவித்துள்ளனர்.
உள்நோயாளி பிரிவில் சிகிச்சையில் இருந்த ராமச்சந்திரன், நேற்று காலை 11:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமைந்தகரை போலீசார் விசாரித்ததில், திடுக்கிடும் தகவல் வெளியானது.
மோகன் ராமின் கள்ளக்காதலியான மீனாட்சியை, மனைவி எனக் கூறி, ஒரு மாதத்திற்கு முன், அமைந்தகரையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துள்ளனர். ஏற்கனவே, மீனாட்சிக்கும், ராமச்சந்திரனுக்கும் உறவு இருந்துள்ளதும் தெரியவந்தது. இந்த பிரச்னையில் நடந்த சண்டையில், மோகன்ராம் தாக்கியதில், ராமச்சந்திரன் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்து, மோகன்ராம் மற்றும் மீனாட்சியை, அமைந்தகரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.