/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளியிலிருந்து பணியிடத்துக்கு' கிரசண்ட் பல்கலையில் மாநாடு
/
பள்ளியிலிருந்து பணியிடத்துக்கு' கிரசண்ட் பல்கலையில் மாநாடு
பள்ளியிலிருந்து பணியிடத்துக்கு' கிரசண்ட் பல்கலையில் மாநாடு
பள்ளியிலிருந்து பணியிடத்துக்கு' கிரசண்ட் பல்கலையில் மாநாடு
ADDED : ஆக 27, 2025 12:29 AM

சென்னை வண்டலுாரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில், 'பள்ளியில் இருந்து பணியிடத்துக்கு' என்ற தலைப்பில், தேசிய உச்சி மாநாடு நடந்தது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அதன் கொள்கைகளை ஏற்று, ஒன்றாக வளர்வோம் என்ற கருப்பொருளுடன், 'சஹோதயா' என்ற பெயரில், பல்வேறு பள்ளிகளை இணைத்து செயல்படுகிறது.
அவ்வாறான 900 பள்ளிகளின் தலைவர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் இணைந்து, வகுப்பறையில் இருந்து பணி வாய்ப்பை பெறும் நிலைக்கு மாணவர்களை தயார்படுத்துவது குறித்த உச்சி மாநாட்டை, வண்டலுாரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் நிகர்நிலை பல்கலையில் நடத்தினர். இதன் துவக்க விழா, சென்னை, ராஜாஜி வித்யாஷ்ரமத்தில் உள்ள பி.வி.பவன்ஸில் நடந்தது.
இந்த மாநாட்டில், சி.பி.எஸ்.இ., தலைவர் ராகுல்சிங், மத்திய பள்ளிக்கல்வி துறை செயலர் சஞ்சய்குமார் உள்ளிட்டோர் மாணவர்களின் திறனை மேம்படுத்துவது வளர்ப்பு, வேலைவாய்ப்பு குறித்து விவரித்தனர்.
பி.எஸ்.ஏ.கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன துணைவேந்தர் முருகேசன், பள்ளி கல்விக்கும் உயர்கல்விக்கும் உள்ள இடைவெளியை குறைப்பது தொடர்பாக பேசினார்.
நிகழ்ச்சியில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் கண்காட்சிகள் இடம்பெற்றன. அவற்றை, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர்.
நிறைவு விழாவில், சி.எஸ்.எஸ்.இ., தலைவர் பவானிசங்கர், துணைத்தலைவர் லட்சுமி பிரபா, செயலர் பி.ஜி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.