ADDED : ஜூன் 23, 2026 07:23 AM
அ நிறம் | அளவு
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், கே.பி.நகரைச் சேர்ந்தவர் ஜெயபால், 66; ரவுடி. இவர், போலீசாரால் ஒற்றைக் கண் ஜெயபால் என அழைக்கப்படுகிறார்.
இவர் மீது, கொலை உட்பட 13க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2024 ஜூலை 5ம் தேதி, சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய கூட்டாளி.
வரும் 5ம் தேதி ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள் வருவதால், பழிக்குப்பழியாக கொலை நடக்கலாம் என, உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளதால், சென்னை மாநகர போலீசார், ஜெயபாலை நேற்று கைது செய்துள்ளனர்.
