மேம்பாலத்தில் இருந்து விழுந்து பைக்கில் சென்ற மாணவர் பலி
மேம்பாலத்தில் இருந்து விழுந்து பைக்கில் சென்ற மாணவர் பலி
ADDED : ஜூன் 23, 2026 07:22 AM

சென்னை: நண்பருடன் பைக்கில் சென்ற கல்லுாரி மாணவர், 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் மேகசுந்தர், 20. இவர், செங்கல்பட்டு மாவட்டம் திருவேற்காடில் உள்ள பொறியியல் கல்லுாரியில் நான்காம் ஆண்டு படித்தார். இவரும், கொரட்டூரைச் சேர்ந்த நண்பரான ஸ்ரீஹரன், 20, என்பவரும், நேற்று காலை எண்ணுாரில் உள்ள கனரக உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், 'இன்டர்ன்ஷிப்' பணிக்காக சென்றிருந்தனர்.
அங்கு சேர்வதற்கான சான்றிதழ்களின் நகல் எடுக்கவும், ஷூ வாங்கவும், 'யமஹா எம்.டி.-, - 15' பைக்கில், கத்திவாக்கம் பஜார் பகுதிக்கு சென்றனர். பின், கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக நிறுவனத்திற்கு திரும்பினர்.
அப்போது, அன்னை சிவகாமி நகர் நோக்கி இறங்கும் பகுதியில் செல்லும்போது, பைக் திடீரென தடுமாறியது.
இதில், பின்னால் அமர்ந்திருந்த மேகசுந்தர், 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாகனத்தை ஓட்டிச் சென்ற ஸ்ரீஹரன் மேம்பாலத்திலேயே விழுந்து பலத்த காயமடைந்தார்.
எண்ணுார் போலீசார், மேகசுந்தரின் உடலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த ஸ்ரீஹரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
