ADDED : செப் 20, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
கோட்டூர்புரம்:
கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், 2021ம் ஆண்டு பதிவான வழிப்பறி வழக்கில், கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்த சுரேஷ், 27 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. ஜாமினில் வந்தவர் சுரேஷ் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவரை கைது செய்ய, செப், 11ம் தேதி நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
நேற்று அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
