ADDED : செப் 20, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
ஓட்டேரி, செப். 21-
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அரடுல் ஷேக், 36. இவர், ஓட்டேரி, எட்வர்ட் பார்க் தெருவில் உள்ள, ஒரு வீட்டில் தங்கி, பாரிமுனையில் உள்ள கடையில் பணியாற்றி வந்தார்.
நேற்று வீட்டில் அவரது அலறல் சத்தத்தை கேட்டு வீட்டின் உரிமையாளர் யசோதா சென்று பார்த்தபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிந்தது.
ஓட்டேரி போலீசார் அரடுல் ஷேக்கின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
