/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேலோ துவக்க விழா போக்குவரத்து மாற்றம்
/
கேலோ துவக்க விழா போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 19, 2024 12:17 AM
சென்னை, பெரியமேடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நேரு விளையாட்டு அரங்கில், கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியை இன்று, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, ஐ.என்.எஸ். அடையாறு, நேரு விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரையிலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விழா நடைபெறும் இடங்களை சுற்றியுள்ள சாலைகள், ஈ.வெ.ரா. சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. பட்டேல் சாலை, ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும்.
அண்ணாசாலை வளைவு முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரையிலான இருவழிதடங்களிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள், அண்ணா வளைவில் திரும்பி அண்ணாநகர் வழியாக, புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.
வடசென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி. புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்படும். பின் ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பாலம், வியாசார்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள், ஈ.வி.கே. சம்பத் சாலை வழியாக, ஈ.வி.ஆர். சாலையை நோக்கி திருப்பி விடப்படும். அழகப்பா சாலை - ஈ.வி.ஆர். சாலை வழியாக செல்லலாம்.

