ADDED : செப் 29, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொருக்குப்பேட்டை,
கொருக்குப்பேட்டை, ஏகாம்பரம் தெருவில் உள்ள மனமகிழ் மன்றத்தில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
இதில், சூதாட்டத்தில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராஜன், 45, மணி, 63, உட்பட 12 பேர் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து, 15,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, பழைய வண்ணாரப்பேட்டை, ராமானுஜம் தெருவில் உள்ள மனமகிழ் மன்றத்தில் இருந்து தண்டையார்பேட்டை போலீசார், அத்திப்பட்டைச் சேர்ந்த இளமாறன், 70, உட்பட 11 பேரை கைது செய்து,அவர்களிடம் இருந்து 6,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.