/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் காந்தி ஜெயந்தி இசை நிகழ்ச்சி
/
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் காந்தி ஜெயந்தி இசை நிகழ்ச்சி
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் காந்தி ஜெயந்தி இசை நிகழ்ச்சி
காஞ்சி வித்யா மந்திர் பள்ளியில் காந்தி ஜெயந்தி இசை நிகழ்ச்சி
ADDED : அக் 03, 2025 12:16 AM
சேலையூர், ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்த நவராத்திரி மகோத்சவத்தில், நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காஞ்சி மாடதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்சவத்தை நடத்தி வருகின்றனர்.
நவராத்திரி விழாவை ஒட்டி, வழக்கமான சந்திரமவுலீஸ்வரர் மூன்று கால பூஜையும், காலை மற்றும் இரவில் நவாவர்ண பூஜையும் நடத்தி வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேஷ பூஜா மண்டபத்தில், செப்., 22 முதல் அக்., 2ம் தேதி வரை, ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று பூஜை நடத்தப்பட்டது. காந்திக்கு பிடித்த மீரா பஜன் மற்றும் மஹா சுவாமி இயற்றிய மைத்ரீம் பஜத பாடல்கள் பாடப்பட்டன.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பள்ளி மாணவர்களுக்கு தேசிய ஒற்றுமை, சேவையின் இன்றியமையாமை குறித்து பேசினார். மேலும், காந்திக்கும், காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிக்கும் இடையே நடந்த சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து கூறினார்.