/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிலாளி மரணத்தில் திருப்பம் சக பணியாளரே தாக்கியது அம்பலம்
/
தொழிலாளி மரணத்தில் திருப்பம் சக பணியாளரே தாக்கியது அம்பலம்
தொழிலாளி மரணத்தில் திருப்பம் சக பணியாளரே தாக்கியது அம்பலம்
தொழிலாளி மரணத்தில் திருப்பம் சக பணியாளரே தாக்கியது அம்பலம்
ADDED : அக் 03, 2025 12:17 AM
வியாசர்பாடி, கூலித்தொழிலாளி மரணத்தில் திடீர் திருப்பமாக, சக பணியாளரே தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
வியாசர்பாடி, பி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் தாஸ், 46; 'காஸ்' கம்பெனி ஊழியர்.
இவர், செப்., 26ம் தேதி வியாசர்பாடி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை - மழைநீர் வெளியேற்றும் நிலையத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், தாஸின் கை, கால் மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. முதுகின் பின்புறம் எலும்பு உடைந்துள்ளது என தெரிய வந்தது. சந்தேக மரணம் என வழக்கு பதிந்தனர்.
சம்பவத்தன்று மது போதையில் இருந்த தாஸை, காவலாளி சங்கர், 53, தாக்கியதாக விசாரணையின்போது வினோத் கூறியுள்ளார். இதையடுத்து, சங்கரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தாஸ், சங்கரின் பணத்தை அடிக்கடி எடுத்து சென்று மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும், சம்பவத்தன்றும் பணத்தை எடுக்கும்போது, ஆத்திரத்தில் சங்கர் தாக்கியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சங்கரை நேற்று கைது செய்தனர்.