/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி., ஊழியரிடம் ரூ.2.20 கோடி மோசடி நெல்லையில் பதுங்கிய கும்பல் சிக்கியது
/
ஐ.டி., ஊழியரிடம் ரூ.2.20 கோடி மோசடி நெல்லையில் பதுங்கிய கும்பல் சிக்கியது
ஐ.டி., ஊழியரிடம் ரூ.2.20 கோடி மோசடி நெல்லையில் பதுங்கிய கும்பல் சிக்கியது
ஐ.டி., ஊழியரிடம் ரூ.2.20 கோடி மோசடி நெல்லையில் பதுங்கிய கும்பல் சிக்கியது
ADDED : ஜூன் 30, 2025 03:45 AM

சென்னை:சென்னை ஐ.டி., ஊழியரிடம் 2.26 கோடி ரூபாய் மோசடி செய்து, நெல்லையில் பதுங்கிய நான்கு பேர் கும்பலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தி.நகரைச் சேர்ந்தவர் கிேஷார்; ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக, அதுதொடர்பாக இணையதளத்தில் தகவல்களை சேகரித்துள்ளார். அதன் மூலம், 'வாட்ஸாப்' குழு ஒன்றிலும் சேர்ந்துள்ளார். இக்குழுவில் இருந்தோர், பங்குச்சந்தை முதலீடு செய்து, கோடிக்கணக்கில் சம்பாதித்தது போன்று பதிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
இதை உண்மை என நம்பிய கிேஷார், பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக வாட்ஸாப் குழுவில் இருந்த 'லிங்க்' மூலம் 2.20 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன்பின், அந்த வாட்ஸாப் குழுவில் இருந்து கி ேஷார் திடீரென நீக்கப்பட்டார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிேஷார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, மோசடி கும்பல் நெல்லை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு சென்று, சத்தியநாராயணன், 60, மணிவேல், 25, ரோஷன், 35, சிம்சன் செல்லதுரை, 26, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4.38 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.