/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகை பட்டறை உரிமையாளரை தாக்கி ரூ.80 லட்சம் மதிப்பு தங்க காசு கொள்ளை யானைக்கவுனியில் துணிகரம்

ADDED : நவ 26, 2025 03:13 AM
யானைக்கவுனி: நகை பட்டறை உரிமையாளர் முகத்தில் மயக்க மருந்து அடித்து தாக்கி, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க காசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது, பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஏழுகிணறு, வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், 34. இவர், யானைக்கவுனி, வெங்கட்ராயன் தெருவில் 'லக்கரம் கோல்டு ஸ்மித்' என்ற பெயரில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, இவரது கடைக்கு தங்க காசு வாங்குவதற்காக இரு நபர்கள் வந்துள்ளனர். அப்போது ஜெகதீஸ் நகைகளை காட்டி விட்டு, பட்டறையின் அறைக்குள் சென்று திரும்பி வந்தபோது, மர்ம நபர்கள் மயக்க மருந்தை ஜெகதீசின் முகத்தில் அடித்து, தாக்கி உள்ளனர்.
இதில், ஜெகதீஸ் மயக்கம் அடைந்து விழுந்தார். பின், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கிராம் தங்க காசுகளை கொள்ளையடித்து, 'சிசிடிவி' கேமராக்களை அடித்து உடைத்து விட்டு, அதனுடைய 'டி.வி.ஆர்.,'யும், கையுடன் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சில மணி நேரத்தில் மயக்கம் தெளிந்த ஜெகதீஸ், அதே தெருவில் உள்ள உறவினரான சேத்தன் கடைக்கு சென்றுள்ளார். அவர், ஜெகதீஸ் காயங்களுடன் இருப்பதை பார்த்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்றவர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் பட்டறையில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.