/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை வெட்டிய 6 பேர் கும்பல் கைது
/
வாலிபரை வெட்டிய 6 பேர் கும்பல் கைது
ADDED : மார் 15, 2024 12:26 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், தாங்கல், சதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜோஸ்வா ராஜ், 23; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில் நின்று மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த ஜோஸ்வா ராஜை அங்கிருந்தோர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், காசிமேடைச் சேர்ந்த பிரதீப், 20, திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திக், 23, கணேஷ் என்ற புள்ள கணேஷ், 23, ராஜா என்ற தவக்களை, 20, குட்டா என்ற லோகேஷ், 18, கார்த்தி என்ற சிசர் கார்த்தி, 19, என தெரிந்தது. இவர்கள் மீது, பல வழக்குகள் உள்ளதும் தெரிந்துள்ளது.
தாக்கப்பட்ட ஜோஸ்வா ராஜுவிற்கும், கணேஷுக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சம்பவம் நடந்தது தெரிந்தது. இந்நிலையில் நேற்று மதியம், மேற்கண்ட ஆறு பேரையும் கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.

