/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை தாக்கிய 8 பேர் கும்பல் கைது
/
வாலிபரை தாக்கிய 8 பேர் கும்பல் கைது
ADDED : ஜன 03, 2025 12:19 AM
வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, சஜ்ஜா முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் நவாஸ், 22. நேற்று முன்தினம் அதிகாலை, வண்ணாரப்பேட்டை, விஜயராகவலு தெரு, நுாலகம் அருகே நின்றிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அவரது நண்பர் மணி, நிறுத்தியிருந்த அவரது பைக்கை எடுத்த போது, அங்கிருந்த மூன்று பேர், பைக்கை எடுக்க விடாமல் அவரிடம் தகராறு செய்துள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பல் மணியை தாக்கியது. இதை பார்த்துக் கொண்டிருந்த நவாஸ், ஏன் மணியை அடிக்கிறீர்கள் என, கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த கும்பல், நவாஸையும் பலமாக தாக்கியுள்ளனர். மேலும், மொபைல் போன் வாயிலாக நண்பர்களையும் அழைத்து, கத்தி மற்றும் இரும்பு ராடால் அவரை தாக்கி விட்டு தப்பியோடினர்.
இதில், படுகாயம் அடைந்த நவாஸை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
அதன்படி, தாக்குதலில் தொடர்புடைய பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 22, மோகன், 28, தமீம் அன்சாரி, 23, இப்ராஹிம், 22, கார்த்திக், 29, கோபிநாத், 29, பாலு, 36, சூர்யா, 22, ஆகிய எட்டு பேரை, நேற்று காலை, போலீசார் கைது செய்தனர்.