/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனை 'லிப்ட்' கேட்க வைத்து வழிப்பறி செய்ய முயன்ற கும்பல்
/
சிறுவனை 'லிப்ட்' கேட்க வைத்து வழிப்பறி செய்ய முயன்ற கும்பல்
சிறுவனை 'லிப்ட்' கேட்க வைத்து வழிப்பறி செய்ய முயன்ற கும்பல்
சிறுவனை 'லிப்ட்' கேட்க வைத்து வழிப்பறி செய்ய முயன்ற கும்பல்
ADDED : ஏப் 17, 2025 11:42 PM
குன்றத்துார், குன்றத்துார் அருகே கோவூர் பகுதியை சேர்ந்தவர் மணி, 38; தனியார் ஊழியர். நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, 'ஹீரோ பேஷன் பிளஸ்' பைக்கில், குன்றத்துார் அருகே வழுதலம்பேடு பகுதியை கடந்து சென்றார்.
அப்போது, அங்கு தனியாக நின்ற சிறுவன் 'லிப்ட்' கேட்டுள்ளார். நள்ளிரவு சிறுவன் தனியாக நின்றதால், இரக்கப்பட்டு சிறுவனை பைக்கில் ஏற்றிய மணி, அந்த சிறுவன் கூறிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், சிறுவனை கடத்திச் செல்கிறாயா என மிரட்டி, பணம் கேட்டு மணியை தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, பைக்கை 'லாக்' செய்துவிட்டு, மணி அங்கிருந்து தப்பியோடினார். பின், நடந்தவற்றை காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு தெரிவித்தார்.
குன்றத்துார் போலீசார், மணியுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அவரது பைக் மட்டும் அங்கிருந்த நிலையில், சிறுவனுடன் மர்ம நபர்கள் தப்பிச்சென்றது தெரிய வந்தது.
சிறுவனை லிப்ட் கேட்க வைத்து, வழிப்பறியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை குன்றத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.