/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா விற்பனை வி.சி., பிரமுகர் கைது
/
கஞ்சா விற்பனை வி.சி., பிரமுகர் கைது
ADDED : டிச 30, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு: காசிமேடு, நாகூரார் தோட்டம் படகு பழுதுபார்க்கும் இடத்தில், கஞ்சா விற்பதாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், காசிமேடு, சிங்காரவேலர் நகரைச் சேர்ந்த வி.சி., கட்சி பிரமுகரான பழைய குற்றவாளி ராஜசேகர், 32, சதீஷ்குமார், 36, ஆகியோர் சிக்கினர்.
இவர்கள், ஒரு வாரத்திற்கு முன் காவாங்கரை பகுதியில், 'பவர்' சூர்யா என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 37,000 ரூபாய்க்கு வாங்கி வந்ததாகவும், அதை சிறு பொட்டலங்களாக போட்டு, 300 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து, ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

