/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலைய பாதையில் குப்பை கழிவால் சீர்கேடு
/
ரயில் நிலைய பாதையில் குப்பை கழிவால் சீர்கேடு
ADDED : ஜன 20, 2025 02:41 AM

கொரட்டூர்:கொரட்டூர் ரயில் நிலைய சுற்றுச்சுவரை ஒட்டி செல்லும் கால்வாயில், சினிவாசபுரம், வடக்கு ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த மக்கள் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். 'இங்கு குப்பை கழிவை கொட்டினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் நாள் கணக்கில் குப்பை தேங்கி கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரயில் பயணியரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
எனவே, அம்பத்துார் மண்டல அதிகாரிகளும், ரயில்வே போலீசாரும், அப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுவோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.