ADDED : மார் 01, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்தாண்டு உற்பத்தி குறைந்ததால், பூண்டு விலை மெல்ல ஏறி வந்தது. ஜன., மாதம் அதிகபட்சமாக 1 கிலோ பூண்டு, சில்லரை விலையில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதிய பூண்டு அறுவடை துவங்கியதால், விலை குறைந்து வருகிறது. கோயம்பேடு மளிகை விற்பனை சந்தையில், 1 கிலோ பூண்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

