UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 04:06 PM

அ நிறம் | அளவு
சென்னை: தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 11ல் தொடங்கியது.
நான்காம் நாளான நேற்று காலை கல்ப விருஷத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும், சுவாமி அருள்பாலித்தார். இன்று காலை, பெருமாள் மோஹினி அவதாரத்திலும், மாலை கருட வாகனத்திலும் அருள்பாலிக்கிறார்.
