ADDED : ஜூலை 10, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்துரைப்பாக்கத்தில், 2.45 கோடி ரூபாயில், எரிவாயு மயானம் கட்டும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, துரைப்பாக்கம், சுப்பிரமணியன் நகர் 4வது தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான, 27,000 சதுர அடி பரப்பு இடம் உள்ளது.
அதில், 3,000 சதுர அடி பரப்பில், 2.45 கோடி ரூபாயில் எரிவாயு மயானம் அமைக்கப்படுகிறது. இதில், 1.55 கோடி ரூபாயில் கட்டடமும், 90 லட்சம் ரூபாயில், சுற்றுச்சுவர், இருக்கை, புல்தரை உள்ளிட்ட கட்டமைப்புகளும் அமைக்கப்படுகின்றன. பணி முடியும் தருவாயில் உள்ளது.
தற்போது, துரைப்பாக்கம் பகுதிமக்கள், பெருங்குடி, ஒக்கியம்பேட்டை, நீலாங்கரை ஆகிய மயானங்களை பயன்படுத்துகின்றனர். இந்த மயானம் பயன்பாட்டுக்கு வந்தால், துரைப்பாக்கம் மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் என, அதிகாரிகள் கூறினர்.

