/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது -- கடத்தல் சிகரெட்டுகள் தீயிட்டு எரிப்பு
/
பொது -- கடத்தல் சிகரெட்டுகள் தீயிட்டு எரிப்பு
ADDED : செப் 03, 2025 12:26 AM
சென்னை சென்னை விமான நிலையத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து சிகரெட்டுகள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த நான்கு மாதங்களில், பயணியரிடம் மட்டுமின்றி ஏர்போர்ட் கார்கோ பகுதியில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி பிரிவிலும், 12.5 கோடி ரூபாய் மதிப்பிலாக சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை தீயிட்டு எரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு பாய்லர் ஆலையில், கடந்த மாதம் 25ம் தேதி தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன. ஆண்டுக்கு இரு முறை, இது போன்று நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.