/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹோட்டல் மாஸ்டர் கழுத்தை அறுத்த மூன்று சிறார்கள் கைது
/
ஹோட்டல் மாஸ்டர் கழுத்தை அறுத்த மூன்று சிறார்கள் கைது
ஹோட்டல் மாஸ்டர் கழுத்தை அறுத்த மூன்று சிறார்கள் கைது
ஹோட்டல் மாஸ்டர் கழுத்தை அறுத்த மூன்று சிறார்கள் கைது
ADDED : ஆக 15, 2025 12:19 AM
மடிப்பாக்கம், ஹோட்டல் மாஸ்டரின் கழுத்தை கத்தியால் அறுத்த மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்துார், உள்ளகரம், அலெக்ஸ் தெருவில் 'ஸ்டார் மவுன்ட்' உணவகம் செயல்பட்டு வருகிறது. அதில், மாஸ்டராக பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த குமார், 54, என்பவருக்கு, கொருக்குப்பேட்டையை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மூன்று சிறார்கள், உதவியாளராக வேலை பார்த்து வந்தனர்.
போதைக்கு அடிமையான குமார், சிறார்களிடம் மது வாங்கி தரும்படி அடிக்கடி வம்பிழுத்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை, அசந்து துாங்கி கொண்டிருந்த மூன்று சிறுவர்களையும், போதையில் இருந்த குமார் எழுப்பியுள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த அவர்கள், காய்கறி வெட்டும் கத்தியால், குமாரின் கழுத்தை அறுத்து தப்பினர். பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு, 15 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான மூன்று சிறுவர்களையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.