/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது போதையில் அநாகரிகம் பெரம்பூர்வாசிக்கு ரத்தக்கசிவு
/
மது போதையில் அநாகரிகம் பெரம்பூர்வாசிக்கு ரத்தக்கசிவு
மது போதையில் அநாகரிகம் பெரம்பூர்வாசிக்கு ரத்தக்கசிவு
மது போதையில் அநாகரிகம் பெரம்பூர்வாசிக்கு ரத்தக்கசிவு
ADDED : மே 09, 2025 01:03 AM
திரு.வி.க.நகர், மே 9-
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அமல்ராஜ், 48. சென்னை, பெரம்பூர், டீஸ் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, பெரம்பூரில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். உடன் வேலை செய்யும் முருகேசன், 38, என்பவரும், அமல்ராஜுடன் தங்கியுள்ளார்.
இருவரும், நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல், மதுபாட்டில் வாங்கி வந்து, வீட்டில் அமர்ந்து குடித்துள்ளனர்.
அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன், அமல்ராஜின் உயிர்நாடியை பிடித்து இழுத்துள்ளார்.
இதில், ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து, பக்கத்து வீட்டினர் உதவியுடன், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அமல்ராஜ் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தகவலின்பேரில், முருகேசனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.