/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - லாரி மோதி கேட் பழுது ரயில் சேவை பாதிப்பு
/
பொது - லாரி மோதி கேட் பழுது ரயில் சேவை பாதிப்பு
ADDED : மே 02, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் உள்ளது. நேற்று மாலை, இவ்வழியே வந்த ஒரு லாரி, ரயில்வே கேட் இரும்பு துாண் மீது மோதியது.
இதில் கேட் சேதமடைந்ததால், மூட முடியவில்லை. இதனால், ரயில்களுக்கு சிக்னல் கிடைக்காமல், இரு மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
உடனடியாக, ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பழுது சரிசெய்யப்பட்டது. 30 நிமிட சீரமைப்புக்கு பின் ரயில் சேவை சீரானது. கேட் பழுதால், புறநகர் மின்சார ரயில்களின் சேவை பாதித்து, ரயில் பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.