ADDED : ஆக 03, 2025 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, குடியிருப்பு பகுதியில் கொழுந்துவிட்டெரிந்த மின்மாற்றியால், அதிகாலையில் சலசலப்பு ஏற்பட்டது.
வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மின் மாற்றியில் இருந்து, 10க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று அதிகாலை, இந்த மின்மாற்றி திடீரென தீப்பிடித்து, கொழுந்துவிட்டு எரிந்தது. வேளச்சேரி துணை மின் நிலையத்திற்கு, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
புழுக்கம் தாங்கமால் மக்கள் வீதிகளுக்கு வந்ததால், சலசலப்பு ஏற்பட்டது. பின், வேளச்சேரி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதையடுத்து, மின் வாரிய ஊழியர்கள் மின் மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் மின்வினியோகம் சீரானது. அதிக மின் அழுத்தம் காரணமாக, மின் மாற்றி தீ பிடித்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.