/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்: மீட்ட வீரர்கள்
/
குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்: மீட்ட வீரர்கள்
ADDED : ஏப் 25, 2025 12:20 AM

செங்கல்பட்டு, ஏப். 25--
செங்கல்பட்டு, சின்னமணியக்கார தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 28. இவரது 3 வயது மகள், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உள்ள பாத்திரங்களை வைத்து விளையாடி உள்ளது.
அப்போது, ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டுள்ளது. அந்த பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை சிக்கி கொண்டது. நீண்ட நேரம் முயன்றும், குழந்தையின் தலையில் சிக்கி கொண்ட பாத்திரத்தை, பெற்றோரால் அகற்ற முடியவில்லை.
இதையடுத்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த வீரர்கள், தங்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளை பயன்படுத்தி, அலுமினிய பாத்திரத்தை வெட்டி எடுத்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதன்பின் தான், குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பகுதிவாசிகள் பெருமூச்சு விட்டனர்.

