/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடு துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு
/
காசிமேடு துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஏப் 16, 2025 12:11 AM
காசிமேடு, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 1,200 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வாயிலாக, மீன்பிடி தொழில் நடக்கிறது.
தமிழகத்தில், நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடைக்காலத்தில், நாட்டு படகு மீனவர்கள் மட்டும் கடலில் சிறிது துாரம் சென்று, மீன் பிடித்து வருவர்.
மீன் இனப்பெருக்கம் அதிகரிக்கும் வகையில், ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரையிலான 61 நாட்கள், இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.
இதனால், காசிமேடில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் கரைகளில் நங்கூரமிடப்பட்டுள்ளன. அப்பகுதியில் சமூக விரோதிகளால் குற்றச்செயல்கள் அரங்கேறாமல் இருப்பதற்காக, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் முக்கிய ஐந்து நுழைவுவாயில்களில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கர் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

