/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் விழுந்த ராட்சத இரும்பு: போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் விழுந்த ராட்சத இரும்பு: போக்குவரத்து பாதிப்பு
சாலையில் விழுந்த ராட்சத இரும்பு: போக்குவரத்து பாதிப்பு
சாலையில் விழுந்த ராட்சத இரும்பு: போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 05, 2024 12:00 AM

திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலையில், ராட்சத இரும்பு அச்சு விழுந்தததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சவாக்கத்தில், கடலில் துாண்டில் வளைவுகள் அமைக்க பயன்படுத்தப்படும், ராட்சத கான்கிரீட் நட்சத்திர கற்கள் தயார் செய்யும் தொழிற்சாலை உள்ளது.
கான்கிரீட் நட்சத்திர கற்கள் தயார் செய்ய பயன்படும், 2 டன் இரும்பு அச்சு, நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை துறைமுகத்தில் இருந்து டிரெய்லர் லாரியில் கொண்டு செல்லப்பட்டது.
எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர் - திருச்சிணாங்குப்பம் சந்திப்பு அருகே லாரி வந்து கொண்டிருந்த போது, திடீரென இரும்பு அச்சு கட்டியிருந்த பெல்ட் அறுந்தது. இதில், பெரும் சத்தத்துடன் இரும்பு அச்சு சாலையில் விழுந்து உருண்டோடியது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. ஆனால், போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்த, திருவொற்றியூர் போலீசார், கிரேன் உதவியுடன் ராட்சத இரும்பு அச்சினை, மீண்டும் டிரெய்லர் லாரியில் ஏற்றி, போக்குவரத்தை சரி செய்தனர்.